Wednesday, January 20, 2016

I also saw the One who saw me - Tamil Article from Inner Man

என்னை காண்பவரை நானும் கண்டேன் 


நம்பிக்கை என்பது ஒருவரின் உணர்வாயுள்ளது.

அறியப்படாத ஒரு காரியம் இப்படியாய் நடக்கும், நடக்கவேண்டும் அல்லது நடந்தது என்னும் உணர்வு அவரின் நம்பிக்கையாகும். இதை ஒருவரின் எதிர்பார்ப்பின் உறுதித்தன்மை என்றால் அது மிகையாகாது. மனித வாழ்வில் நம்பிக்கையானது இன்றியமையாததாயுள்ளது. இது வயது வேறுபாடின்றி எல்லோரிலும் காணப்படும் ஓர் அம்சமாகும்.

குழந்தைகள் முதற் கொண்டு பிள்ளைகள் எல்லோரும், தம் பெற்றோரிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களாய் இருக்கின்றனர். இது மனிதரிடையே இயல்பாகவே காணப்படுகின்றது. இவை மாத்திரமல் லாமல் இன்னும் அநேக காரியங்களைப் பற்றிய நம்பிக்கைகளும் மனிதரிடத்தில் உண்டு.

சில சமயங்களில் பொய்யை நம்புவதும் உண்டு. இத்தகைய நம்பிக் கைகளின் உண்மைத்தன்மை குறுகிய காலத்திற்குள் வெளிப்பட்டு விடுவதுமுண்டு. இன்னும் பலர் அத்தகைய நம்பிக்கையின் பொய்த்த ன்மை வெளிப்பட்டிருந்தாலும், அந்த நம்பிக்கையின் செயற்பாடுகள் சந்தோசத்தை கொடுப்பதனால் அதினால் பாதிப்பில்லையென்று அதைத் தொடர்வதுமுண்டு. உதாரணமாக நத்தார் தாத்தா (Santa Clause) என்னும் கற்பனை நபர் குறித்த செயற்;பாடுகள்.

மனிதர்கள் எவரும் தங்கள் நம்பிக்கை வீண் போவதை விரும்புவ தில்லை.

நம்பிக்கை வீண் போகும் நிலைமைகளில்
நான் ஏமாந்து போனேன்
எனக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்டது
நான் எனது மதியீனத்தின் பலனை அனுபவிக்கின்றேன் என்று மனிதர்கள் நொந்து கொள்வதுண்டு.
பல சந்தர்ப்பங்களில் இதனால் வன்முறைகளும் தோன்றுவது முண்டு.

பரிசுத்த வேதாகமத்தில் ஆகார் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைக் குறித்த சம்பவத்தைப் பார்ப்போம். (ஆதி 16:)

ஆபிரகாம் சீமானாயிருந்தான். அவன் மனைவி சாராய்க்கு பிள்ளை யில்லாதிருந்தது. அவள் தன் கணவனுக்கு சந்ததியுண்டாகும் படி தனது அடிமைப் பெண் ஆகாரை அவனுக்கு மனைவியாக கொடுத்தாள்.

ஆகாரின் வாழ்வில் சந்தோசம் துளிர்க்கத் தொடங்கியது, அவள் கர்ப்பவதியானாள். தான் கர்ப்பமுற்றதால் தனது எஜமானியை அற்பமாக எண்ணத் தொடங்கினாள். அவளது நம்பிக்கைகள் பெருகிக் கொண்டது.

அவளது எஜமானி சாராய் தனது அடிமைப் பெண்ணின் நடவடிக் கைகளை கண்ட போது அவளை மிகவும் கடினமாய் நடத்தியதால் இந்நிலையில் ஆகாரின் நம்பிக்கையெல்லாம் விலகி ஓடத் தொடங்கியது. தனது பிள்ளையின் தகப்பனான எஜமானனிடத்திலிருந்து அவளுக்கு உதவி கிடைக்கவில்லை. இதனால் அவள் எல்லாவற் றையும் விட்டு ஓடிப்போகின்றாள்.

அவளது எதிர்பார்ப்புகள் யாவும் கானல் நீராயிற்று. வாழ்வில் தோற்றுப் போன நிலைமை. எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற நிலை. எல்லாவற்றையும் தொலைத்துவிட்ட உணர்வு.

அந்நிலையிலே கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு: சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார். அந்த இடத்திலே அவள் ஆசீர்வாதத்தை பெற்றவளாய் தனது எதிர்காலத்தைக் குறித்த அறிவுடையவளாய் தேவ வழி நடத்தலைப் பெற்றுக் கொண்டாள்.

அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.

ஆம் எங்களைக் காண்கிற தேவன் இருக்கிறார். அவர் இரக்கமுள்ளவர். காருண்யத்தினால் எம்மை அணைத்துக் கொள்ளும் அன்புள்ள தேவன்.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

இன்று உனது வாழ்வில் தேவன் வர வேண்டுமானால், இயேசுவே என் பாவங்களை மன்னித்து  என்னை உமது பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளும் என்று கூறுவாயாக.

“உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.”


போதகர் ரஞ்சிற் கொன்ஸ்ரன்ரைன்
கிறேஸ் ற்ரபனக்கல்  சபை

THE INNER MAN - JAN 2016   

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.