ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை
இன்றைய உலகில் பிள்ளைகள், வாலிபர்கள் பலதரப்பட்ட சவால்களை எதிர்நோக்கிறார்கள். பெற்றோர் வேறு தேசத்திலே கல்வி கற்றதால், இங்கு பாடசாலையில் தங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவைகளை உண்டு பண்ணும் அடிப்படைக் காரணிகளையும் அறிய சிரமமாயிருக்கின்றது. அவற்றை அறிந்து கொண்டாலும், பல சமயங்களிலே, பிள்ளைகள் தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றார்கள். ஆகவே பிள்ளைகள் தங்கள் சூழ்நிலைகளை வெற்றிகொள்ள தேவ வழிடத்துதல் இன்றியமையாதது.
தேவ வழிடத்தலை பெற்றுக்கொள்ள, பிள்ளைகள், சிறிய வயத்திலிருந்தே முறையான கிறிஸ்தவ பாடத்திட்டத்தின் படி பயிற்றப்பட வேண்டும். அந்தந்த வயதிற்குரிய சவால்களை எதிர் நோக்கி வெற்றி பெற, சரியான காலத்தில், தேவ காரியங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். எப்படி தேவ வழி நடத்தலை பெற்றுக் கொள்வது, எவை தேவனிடமிருந்து வருகின்றது, இவை இந்த உலத்தினால் திணிக்கபடுகின்றன என்பதை அறிய, முறையான பாடத்திட்டம் அடங்கிய வேதாகம பாடங்களை ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டும்.
இவற்றை மையமாக கொண்டு, ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை(SUNDAY SCHOOL) வகுப்புகளை அமைத்துள்ளோம். நாலு (4) வயதிலிருந்து பதினெட்டு (18) வயதுவரை, முறையான வேதபாடங்களை கற்றுகொள்ள தேவையான புத்தகங்கள் பெற்றுக்கொள்வதில் நாங்கள் முதலீடு செய்கின்றோம். கரிசணையோடு கற்றுக்கொடுக்கும் தகுந்த ஆசிரியர்களை ஒழுங்கு படுத்தியுள்ளோம்.
தேவ காரியங்களை, பிள்ளைகளின் சிறிய வயதிலிருந்து கற்றுங் கொடுங்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.