தேவ வாகுத்தத்தங்கள்
தேவன் தாமே எங்களுக்கு முன்பாக "ஆசீர்வாதத்தையும் சாபத்தையும்",
"ஜீவனையும் மரணத்தை யும்" வைத்திருக்கிறார். தீர்மானம் என்னுடையது . தேவனுடைய விருப்பம், சித்தமெல்லாம் ஒருவரும் கேட்டு போகாமல் நித்திய ஜீவனை அடைவதாகும்.
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16)
அது மட்டுமல்லாமல் நன்மையை கண்டடைய அநேக வாகுத்தத்தங்களை எங்களுக்கு அருளியிருக்கிறார். அந்த வாகுத்தங்களை நாங்கள் விசுவாசத்தோடு பற்றிக்கொண்டு, எங்கள் வழிகளை கர்த்தருக்கு ஒப்பு கொடுத்து வாழ்ந்தால், அவைகள் எங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும்.
கர்த்தர் வாக்குமறாதவர்! காலங்கள் மாறிப்போகலாம், சூழ்நிலைகள் எல்லாம் எதிரானதாக தென்படலாம், நம்பின மனிதர்களும் உதவ முடியாத நேரம் வரலாம், ஆனால், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
கர்த்தராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பராக!
"உள்ளான மனிதன்" சஞ்சிகையை எங்கள் இணைய தளத்தில் படிக்கலாம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.