Thursday, January 28, 2016

சபையின் விசுவாச கோட்பாடுகள் - மூல உபதேசம்

அபோஸ்தல உபதேசம் 

1. தேவத்துவத்தின் ஒருமைப்பாடும் திரித்துவத்தின் உண்மையும் மூவரும் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) ஒரே தன்மையுடையவராய் திரியேகத்துவத்திள் இசைந்திருத்தல் (எண்ணாகமம் 6:22-27, ஏசாயா 6:3, மத்தேயு 3:16-17, மத்தேயு 28:19, யோவான் 15:26, யோவான் 5:7, லூக்கா 2:26, யோவான் 1:3, யோவான் 5:18-19, யோவான் 20:28, ரோமர் 8:9)

2. மனித சுபாவத்தின் முழுப்பாவத்தன்மை, மனந்திரும்பி மறுபிறப்பு அடைவதின் அவசியம், மனந்திரும்பாதவனின் இறுதியான நித்திய ஆக்கினைத் தீர்ப்பு. (சங்கீதம் 51:5, மத்தேயு 25:41-46, யோவான் 3:3, 5:19, அப்போஸ்தல நடபடிகள் 2:38, 17:30, ரோமர் 3;:10-18, எபேசியர் 2:1-3, வெளிப்படுத்தல் 20:12-15, ஏசாயா 66:24)

3. நமது கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, பாவமற்ற ஜீவியம், பிராயசித்த மரணம், உயிர்தெழுத்தலின் வெற்றி, பரமேறுதல், நமக்காக பரிந்து பேசுதல், இரண்டாம் வருகை, ஆயிரவருட அரசாட்சி (சகரியா 14:4, மத்தேயு 1:23, 24:30, 28:5-6, லூக்கா 1:35, யோவான் 14:30, 20:3-18, அப்போஸ்தலர் 1:9-11, ரோமர் 5:11, 1:4, பிலிப்பியர் 2:6-11, 1 தெசலோகிகேயர் 4:15-17, 2 கொரிந்தியர் 5:19, 1 தீமோத்தேயு 3:16, எபிரேயர் 2:17, 4:15, 7:25-26, 1 யோவான் 2:1, வெளிப்படுத்தல் 1:7, 20:1-15)

4. இயேசுக்கிறிஸ்துவின் முடிவற்ற ஊழியத்தின் பயனாக விசுவாசிக்கிறவர்கள் நீதிமானாகுதலும், பரிசுத்தமாகுதலும். (ரோமர் 3:24, 5:1-9, 6:6, 11-14, 8:33, 10:4, 1 கொரிந்தியர் 6:11, 2 கொரிந்தியர் 7:1, எபிரேயர் 10:10)

5. விசுவாசிகளுக்கு அடையாளங்களுடன் கூடிய பரிசுத்தாவியின் நிறைவு. (லூக்கா 3:16, 11:9-13, யோவான் 7:37-39, அப்போஸ்தலர் 1:4-5, 2:1-4, 38, 39, அப்போஸ்தலர் 10:46, 19:6, எபேசியர் 1:23, 4:12)

6. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் பக்திவிருத்தி, பரிசுத்தம், ஆறுதலுக்கான பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள். (1 கொரிந்தியர் 12:4-11, 14:3, 12, 26, எபேசியர் 1:23, 4:12)

7. தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம், கர்த்தருடைய பந்தி, ஆகிய ஞான அனுமானங்கள். (மத்தேயு 28:16, மாற்கு 16:16, லூக்கா 22:19, 20, அப்போஸ்தலர் 2:38, 8:12, 36-38, ரோமர் 6:3-7, 1 கொரிந்தியர் 10:15-22, 1 கொரிந்தியர் 11:23-32)

8. தெய்வீக அருளால் எழுதப்பட்ட வேத வசனமும், அதிகாரமும். (2 தீமோத்தேயு 3:16, 2 பேதுரு 1:21, லூக்கா 24:44, 1:1-4, 2 சாமூவேல் 23:2)

9. அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிஷேசகர், மேய்ப்பர், போதகர், மூப்பர், உதவியாளர் இவர்களுக்கான சபையின் ஆளுகை. (அப்போஸ்தலர் 6:2, 3, 6, 13:1-3, 20:28, 2 கொரிந்தியர் 11:28, எபேசியர் 4:8-16, 1 தீமோத்தேயு 3:1-13, தீத்து, 1:5-9, எபிரேயர் 13:17, 1 பேதுரு 5:1-4, லூக்கா 6:13, ரோமர் 16:1)

10. கிருபையினின்று வீழ்ச்சியுறுதல் சாத்தியம் (ரோமர் 11:20-22, கொலேசேயர் 1:21-23, எபிரேயர் 6:4-6, 10:26-29, 38, 39, வெளிப்படுத்தல் 22:19, பிலிப்பியர் 2:12, 2 பேதுரு 2:4-22)

11. தசமபாகம் மனப்பூர்வமான காணிக்கை செலுத்துதல் (ஆதி 14:20, 28:22, நீதி 3:9-10, மல்கியா 3:10, 1 கொரிந்தியர் 9:6-7, எபிரேயர் 7:1-10)


GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


வெள்ளி களிம்பாகுமோ?

வெள்ளி களிம்பாகுமோ?

பொன் மங்கிப் போகுமோ? பசும்பொன் மாறிப் போகுமோ? வெள்ளி களிம்பாகுமோ?

இஸ்ரவேல் தேவனை விட்டு பின்வாங்கி பாவ வழிகளில் சென்று தங்களைக் கெடுத்துக் கொண்ட போது அவர்கள் தேவனுடைய பாதுகாப்பை இழந்து போனார்கள். அவர்கள் வாழ்வில் துன்பங்களும் அழிவுகளும் பெருகியது. அந்த நிலைமையை குறித்து தேவனுடைய தீர்க்கதரிசியான ஏரேமியா கூறிய வார்த்தைகள்:

“ஐயோ! பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. ஐயோ! தங்கத் துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.”

ஆம் அவர்களது மகிமை அவர்களை விட்டு போனது. அவர்களது மேன்மை அவர்களிடத்திலிருந்து அகற்றப்பட்டது. தங்கத்துக் கொப்பான வர்கள் மட்பாண்டங்களாய் எண்ணப்பட்டார்கள். இஸ்ரவேல் பாவ வழிகளில் சென்ற போது தேவன் தமது தீர்க்கதரிசியான ஏசாயா வினுடாக அவர்களைக் குறித்து:

“உன் வெள்ளி களிம்பாயிற்று, உன் திராட்சரசம் தண்ணீர்க் கலப்பானது. உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கி றார்கள், அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகின்றான், திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள், விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.” என்று கூறியுள்ளார்.

தங்கமே, தங்கமணியே என்று தாலாட்டிய பிள்ளைகள் ஏன் இப்படி யானார்கள்? கடவுளை நம்பித்தானே இருக்கிறேன். பின்ன ஏன் இப்படியாயிற்று? என்ற கேள்விகளும் கேட்கப்படுவதுண்டு.

சோம்பேறியாக உள்ளவன் சோம்பலின் அப்பத்தைக் புசிப்பான். அவனைக் குறித்து பரிசுத்த வேதாகமத்திலே இவ்விதமாய் கூறப்பட்டு ள்ளது.

“சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது.” என்றும் “சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் “சோம்பேறியின் வயலையும் மதியீனனுடைய திராட்சைத்தோட்ட த்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக் காடாயிருந்தது: நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.” என்றும் கூறப்பட்டுள்ளது. அவனிடத்தில் வயலிருந்தும் வேலை செய்யாதவனாய் வாழ்கிறான். அவன் வாழ்வில் “அவன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் அவன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.”

இன்று கடவுளை நம்பித்தானே இருக்கின்றேன் என்பவன், கருத்தோடு மெய்யான தேவனுக்கேற்றபடி வாழாவிட்டால் அப்படிப்பட்டவன் மேற் கூறப்பட்ட சோம்பேறியைப் போலவே காணப்படுகின்றான். அவனுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது. அவன் வாழ்க்கையானது காஞ்சொறி மூடிய நிலத்தைப் போலவும், இடிந்து போயுள்ள கற்சுவர் போலவுமிருக்கும்,

மனிதர்கள் தேவனை அறியவும், அவர்கள் பரிசுத்த வாழ்வை வாழவும், அவர்களை மோட்சத்தில்  சேர்க்கவும் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்து சொன்னார் “நானோ அவர்களுக்கு (இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு) ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நான் அவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவர்கள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவர்களை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை.”

தங்கத்திலும் மேலானதும் கிடைப்பதற்கரிய பொக்கிஷமான மனித வாழ்வு மங்கிப் போகாமலும் வாழ்வின் மேன்மை ஓங்கியிருக்கவும் தேவனுடைய திவ்விய வசனம் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயுள்ளது.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

பொன் மங்கிப் போயிற்றோ? பசும்பொன் மாறிப் போயிற்றோ? வெள்ளி களிம்பாயிற்றோ?

உன் பாவங்களை மன்னித்து உன் சாபங்களை நீக்கி உனக்கு புது வாழ்வு தந்து உன்னை புது மனிதனாய் மனுஷியாய் மாற்ற இயேசு இருக்கிறார். இன்று நீ அதை விரும்புவாயாகில், இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளையாய் எற்றுக்கொள்ளும் என்று கூறுவாயாக. இயேசு சொன்னார் “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

போதகர் ரஞ்சிற் கொன் ஸ்ரன்ரைன் 
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH




Wednesday, January 27, 2016

அறுப்பு மிகுதி!

    இயேசு:
    அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். (லூக்கா 10:2 )

Tamil Bible Studies, ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை

ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை

இன்றைய உலகில் பிள்ளைகள், வாலிபர்கள் பலதரப்பட்ட சவால்களை எதிர்நோக்கிறார்கள். பெற்றோர் வேறு தேசத்திலே கல்வி கற்றதால், இங்கு பாடசாலையில் தங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவைகளை உண்டு பண்ணும் அடிப்படைக் காரணிகளையும் அறிய சிரமமாயிருக்கின்றது. அவற்றை அறிந்து கொண்டாலும், பல சமயங்களிலே, பிள்ளைகள் தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றார்கள். ஆகவே பிள்ளைகள் தங்கள் சூழ்நிலைகளை வெற்றிகொள்ள தேவ வழிடத்துதல் இன்றியமையாதது. 

தேவ வழிடத்தலை பெற்றுக்கொள்ள, பிள்ளைகள், சிறிய வயத்திலிருந்தே முறையான கிறிஸ்தவ பாடத்திட்டத்தின் படி பயிற்றப்பட வேண்டும். அந்தந்த வயதிற்குரிய சவால்களை எதிர் நோக்கி வெற்றி பெற, சரியான காலத்தில், தேவ காரியங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். எப்படி தேவ வழி நடத்தலை பெற்றுக் கொள்வது, எவை தேவனிடமிருந்து வருகின்றது, இவை இந்த உலத்தினால் திணிக்கபடுகின்றன என்பதை அறிய, முறையான பாடத்திட்டம் அடங்கிய வேதாகம பாடங்களை  ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டும்.

இவற்றை மையமாக கொண்டு, ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை(SUNDAY SCHOOL) வகுப்புகளை அமைத்துள்ளோம். நாலு (4) வயதிலிருந்து பதினெட்டு (18) வயதுவரை, முறையான வேதபாடங்களை கற்றுகொள்ள தேவையான புத்தகங்கள் பெற்றுக்கொள்வதில் நாங்கள் முதலீடு செய்கின்றோம். கரிசணையோடு கற்றுக்கொடுக்கும் தகுந்த ஆசிரியர்களை ஒழுங்கு படுத்தியுள்ளோம். 

தேவ காரியங்களை, பிள்ளைகளின் சிறிய வயதிலிருந்து கற்றுங் கொடுங்கள். 





Our Fundamental Beliefs

Fundamental Beliefs 

1. The one true and living God, who eternally exists in three persons in unity: Father, Son, and Holy Spirit.

 2. The divine inspiration and authority of Holy Scripture.

 3. The original perfection of creation; the inherent corruptness of humanity through the Fall; the necessity of repentance and regeneration by grace and through faith in Christ alone, and the eternal separation from God of the finally unrepentant.

 4. The Virgin Birth, sinless life, atoning death, triumphant resurrection, ascension and continuing intercession of our Lord Jesus Christ. His second coming and eternal kingdom reign.

 5. The Justification and sanctification of believers through the finished work of Christ, their security as they remain in Him and their future resurrection in an incorruptible body.

 6. The Sacraments of Baptism by immersion and of the Lord’s Supper.

 7. The Baptism of the Holy Spirit for believers with supernatural signs empowering the Church for its mission in the world.

 8. The gifts of the Holy Spirit for the building up of the Church and ministry to the world.

 9. Christ’s leadership of the Church through Apostles, Prophets, Evangelists, Pastors, Teachers and elders for the unity, maturity and growth of the Church.

 10. The privilege and responsibility of wise stewardship of that entire God has given, including the practice of tithes and offerings to the local church. 

11. Tithes and Freewill offering


GRACE TABERNACLE APOSTOLIC CHURCH





Tamil Christian Church in Toronto

We are a Tamil Christian Church, mainly focused on the Tamil community who lives in Greater Toronto Area.

GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


Pentecostal Anointing

We believe Pentecostal anointing:

- The Baptism of the Holy Spirit for believers with supernatural signs empowering the Church for its mission in the world.


- The gifts of the Holy Spirit for the building up of the Church and ministry to the world.

GRACE TABERNACLE APOSTOLIC CHURCH
Scarborough, Ontario, Canada