மனிதர்களிடையே விஞ்ஞான அறிவு மிகவும் வளர்ந்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சியானது எல்லா துறைகளிலும் மிக வேகமாய் வளர்ந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் எத்துறையில் தங்கள் கல்வியைத் தொடர்வது என்பது மிக முக்கிய மான ஓர் தீர்மானமாகக் காணப்படுகின்றது. இன்று பல துறைகளில் கல்வி அறிவு வளர்ந்துள்ளதே அதற்குக் காரணமாயுள்ளது. நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் புதிய புதிய ஆராய்ச்சிகளும் கண்டு பிடிப்புக்களும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அகழ்வாராய் ச்சியினால் பல கடந்த கால நிகழ்வுகளையும் அவற்றின் காலங்க ளையும் கணித்துக் கூறுகின்றனர். தற்போதுள்ள காலத்தைக் குறித்து பேசுவோமானால், பலர் சலித்துக்கொள்ளும் சம்பவங்கள் அநேக முண்டு. கொலைகள், கொள்ளைகள், அழிவுகள், யுத்தங்கள் என பல துயர்கள் மனிதர்களின் வாழ்க்கையில் நடந்தேறுகின்றன.
பரிசுத்த வேதாகமத்திலே காலங்களைக் குறித்து சொல்லப்பட்டவைக ளைப் பார்ப்போம்.
காலத்தை உணராதவர்கள்
பரிசேயர் சதுசேயர் எனப்பட்ட வகுப்புக்களைச் சேர்ந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் வந்து அவரைத் தாங்கள் அறிந்து கொள்ளத்தக்கதாக வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் கேட் டார்கள். அவர்கள் மத்தியிலே அநேக காரியங்களை கர்த்தர் செய்திரு ந்தும் அவரை விசுவாசிக்க மனதில்லாமல்; அவihச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக் குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
அவர்களுக்கு இயேசு பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வான மிட்டிருக்கிறது, அதனால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதய மாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றை க்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்கா ரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? (மத்தேயு 16)
கடந்த காலங்களை ஆராய்கிறோம், அவற்கைக் குறித்து பேசுகிறோம். ஆனால் இப்போது நடைபெறுபவைகள் ஏன் நடைபெறுகின்றன?
ஒருமுறை கர்த்தரின் சீஷர்கள் அவரிடத்தில் வந்து ஜெருசலேம் தேவாலயத்தைக் காண்பித்து அதைக்குறித்துப் பேசினார்கள். அவை மிகப் பெரிதான பளிங்குக் கற்களினால் கட்டப்பட்டிருந்தது. (மத்தேயு 24) இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீ~ர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யா கவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
பின்பு, இயேசு ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீ~ர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.
எப்போது ஜெருசலேம் தேவாலயம் இடிக்கப்படும்? ஆம் அது இடிக்கப்பட்டது. கர்த்தர் சொன்னபடி காலம் நிறைவேறியது. சீஷர்கள், இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்றும் கேட்டார்கள் அதற்து அவர்:
“ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகih வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக் கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேத னைகளுக்கு ஆரம்பம்.”
ஆம், கர்த்தர் சொன்ன காலம் சமீபமாயுள்ளது.
பிரியமான சகோதரனே, சகோதரியே!
புதியதோர் சந்ததி வருகின்றது. மற்றோர் சந்ததி உலகத்தை விட்டு செல்கின்றது. மனிதன் இவ்வுலகில் வாழ்நாள் குறுகினவனாயுள்ளான். காலங்களும் கடந்து போகின்றது. தேவாதி தேவனை சந்திக்கத்த க்கதாக உனது வாழ்க்கை இருக்கின்றதா? உனக்கு ஆறுதல் தந்து உன் பாவங்களை மன்னிக்கும் இயேசு உன்னைத் அதற்குத் தகுதிப் படுத்துவார். நீ அதை விரும்புவாயாகில், இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளை யாய் எற்றுக்கொள்ளும் என்று கூறுவாயாக. இயேசு சொன்னார்:
“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.”
கிறேஸ் ற்ரபனக்கல் அப்போஸ்தல சபை
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.