பிரதான வாசகம்: ரோமர் 15:33
ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு (2 தீமோத்தேயு 2:1)
“ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்: மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்: ஆகிலும் பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்: அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும் போகவில்லை. இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்: அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள்.” என்று கர்த்தர் ஒரு உவமையைச் சொன்னார்.
இன்றைய நாட்களிலே பலருடைய வாழ்க்கை, இரண்டாவது மகனுக்கு ஒத்ததாக இருக்கின்றது. “ஆம் ஐயா செய்கின்றேன்” “நீர் சொல்வதை கேட்கிறேன்” என்று கூறிவிட்டு, அதை அவர்கள் வாழ்க்கையிலே செய்வதில்லை. இப்படிப்பட்டவர்கள் பிதாவின் சித்தத்தை செய்யாத வர்கள் என்று கர்த்தராகிய இயேசு கூறினார்.
எங்கள் மீது பொல்லாப்பு வரும் முன்பதாக நாங்கள் கணக்கு பார்க்கவேண்டும். கர்த்தர் என்னிடம் என்னத்தைத் தந்தார்? என்னத்தை நான் செய்திருக்கிறேன்? கர்த்தருக்கு முன்பாக நான் எவ்விதமாக காணப்படுகின்றேன்?
ஒன்றும் இல்லாத நிலையில் இருந்து தேவனால் தூக்கி உயர்த்தப்பட்ட சிலர், தங்கள் வாழ்க்கையில் கணக்குப்பார்க்க தவறினதினால், அவர்களுடைய வாழ்க்கையின் பின்பகுதி பரிதாபமான நிலைக்கு சென்றுவிட்டது. ஆரம்பத்திலே தேவன் செய்த காரியங்களை அறிக்கை பண்ணி, தேவனுக்கு நன்றியுள்ள வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள், காலங்கள் சென்றபின், தங்களை உயர்த்திய தேவனை மறந்து, மற்றவர்களின் பார்வைக்கு தாங்கள் பெரியவர்கள் என்றும் பரம்பரை பரம்பரையாக தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் பெருமையாக பேசி, தேவனை விட்டு விலகிப்போன வாழ்க்கையை வாழ்ந்தார்கள். தேவனுடைய பிள்ளை என்ற பட்டம் (வவைடந) அவர்களிடம் உண்டு, ஆனால் தேவனோ அவர்களோடு இல்லை. இப்படியாக ஆரம்பத்தில் தேவனால் வழிநடத்தப்பட்ட ஊழியர்களும் கூட பிற்காலத்தில் மனிதர்கள் பார்த்து ஆச்சரியப்படத்தக்க விதத்தில் விழுந்து போயுள்ளார்கள். இவர் எல்லாற்றையும் நன்றாக செய்தாரே? ஏன் இப்படியாக போய்விட்டார் என்று கேள்விகளை கேட்பார்கள். ஏன் இப்படியாக மனிதருடைய வாழ்க்கையில் நடைபெறுகின்றது? ஏனென்றால் தேவன் அவர்களோடு இல்லை, அவர்களைவிடடு விலகிச் சென்றுவிட்டார்.
சவுல் ராஜாவின் வாழ்;க்கையும் இதற்கொத்ததாக இருந்தது. தேவனை விட்டு தன்னுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினான். இதனால் தேவன் சவுல் ராஜாவை தள்ளிவிட்டார்.
இப்படியாக இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகளும், பசும் பொன்னைப் போல இருக்கின்றார்கள், காலப்போக்கில் இவர்கள் தேவனை விட்டு விலகிச் செல்கின்றார்கள். காலப்போக்கில் இவர்கள் ஒன்றுக்கும் பிரயோஜனமற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள்.
கர்த்தரோடு கூட என்னுடைய வாழ்க்கை எவ்விதமாக இருக்கின்றது என நாங்கள் கணக்குப்பார்க்க வேண்டும். எந்த நிலையில் இருந்து கர்த்தர் எங்களை அழைத்தார் என்பதை மறந்து விடக்கூடாது. தேவனால் வந்த எந்த காரியமும் பரிசுத்தமாயிருக்க வேண்டும். தேவ காரியத்திற்கு விரோதமான எந்த ஒரு காரியமும், கொஞ்சமும் எங்கள் வாழ்க்கையில் இருக்க முடியாது. இப்படியாக தேவ சித்தத்தை நிறைவேற்றி, கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பெலப்பட வேண்டும்
Pastor Ranjit Constantine
A Tamil Church in Toronto
Grace Tabernacle Apostolic Church
Pastor Ranjit Constantine
A Tamil Church in Toronto
Grace Tabernacle Apostolic Church
இந்த செய்தியை முழுமையாக கேட்க